7ஆவது சுற்று சீன-ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் நெடுநோக்கு ரீதியான பேச்சுவார்த்தை
2024-03-20 19:55:26

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் ஆகியோரின் முன்னிலையில், சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான 7ஆவது சுற்று வெளியுறவு மற்றும் நெடுநோக்கு ரீதியான பேச்சுவார்த்தை மார்ச் 20ஆம் நாள் கான்பராவில் நடைபெற்றது.

இதில் வாங்யீ கூறுகையில், ஆஸ்திரேலியாவுடன் இணைந்து,இரு நாட்டு உயர் நிலை பரிமாற்றத்துக்கான ஏற்பாட்டை மேலும் முன்னேற்றவும், பல்வேறு துறைகளில் கலந்தாய்வு மற்றும் பேச்சுவார்த்தை அமைப்புமுறைகளை பன்முகங்களிலும் மீண்டும் தொடங்கி வைத்து பயன்படுத்தவும் சீனா விரும்புவதாக தெரிவித்தார்.

மேலும், எரியாற்றல் மற்றும் கனிமவளம், வேளாண்மை பொருட்கள் உள்ளிட்ட பாரம்பரிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, புதிய எரியாற்றல், எண்ணியல் பொருளாதாரம், தூய்மை வளர்ச்சி, காலநிலை மாற்றம் முதலிய துறைகளில் அதிக ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.தவிர, தைவான், ஹாங்காங், சின்ஜியாங், சி ட்சாங், தென் சீனக் கடல் உள்ளிட்ட பிரச்சினைகளில் சீனாவின் கோட்பாடு ரீதியான நிலைப்பாடுகளையும் வாங்யீ தெரிவித்தார்.

பென்னி வோங் கூறுகையில், வரலாறு, வர்த்தகம், பண்பாடு முதலிய துறைகளில் ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு உள்ளது. ஒன்றுக்கொன்று மதிப்பு அளிக்கும் அடிப்படையில், சீனாவுடனான பேச்சுவார்த்தை மற்றும் தொடர்பை மேலும் வலுப்படுத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது என்று தெரிவித்தார்.