கியூச்சியாவ்-2 செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது சீனா
2024-03-20 10:04:57

சந்திரன் ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கியூச்சியௌ-2 (Queqiao-2) எனும் செயற்கைக்கோள் மார்ச் 20ஆம் நாள் புதன்கிழமை காலையில் சீனாவின் வென்சாங் விண்வெளி ஏவுத்தளத்தில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. புவிக்கும் சந்திரனுக்கும் இடையே தொலைத்தொடர்பு ரீதியிலான பாலத்தை உருவாக்கும் இந்த செயற்கைக்கோள், சாங்ஏ-4 மற்றும் சாங்ஏ-6 ஆகிய விண்கலங்களுக்கு ரிலே சேவையை வழங்கும். 

2018ஆம் ஆண்டு ஏவப்பட்ட கியூச்சியௌ எனும் செயற்கைக்கோளுடன் ஒடுப்பிடுகையில் இந்த புதிய  செயற்கைக்கோளுக்கு அதிக தொழில்நுட்ப புத்தாக்கங்களும் மேம்பட்ட செயன்திறனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திட்டப்படி, சாங்ஏ-6 விண்கலம் 2024ஆம் ஆண்டின் முற்பாதையில் உரிய நேரத்தில் செலுத்தப்பட உள்ளது என்று தெரிய வந்துள்ளது.