சூடான் மற்றும் அதன் அண்டை நாடுகள் சந்தித்த கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலைமை
2024-03-21 09:58:33

ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அலுவலகத்தின் துணை செயல் இயக்குநர் கார்ல் ஸ்கோவ் மார்ச் 20ஆம் நாள் சூடானின் நிலைமை குறித்து ஐ.நா.பாதுகாப்பவைக்குத் தெரிவித்தார். அவர் கூறுகையில், சூடானில் ஆயுத மோதல் உலகின் மிக மோசமான பசி நெருக்கடியைத் தூண்டுகின்றது என்றார். சூடான் மற்றும் அதன் அண்டை நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 2 கோடியே 80 இலட்சம் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். அவர்களில் சூடானில் சுமார் 2 கோடியே 80 இலட்சம் மக்களும், தெற்கு சூடானில் சுமார் 70 இலட்சம் மற்றும் சாட்டில் ஏறக்குறைய 30 இலட்சம் மக்கள் உள்ளனர்.

சூடானில் உணவு பற்றாக்குறை வரும் வாரங்களில் மேலும் மோசமடையும். சர்வதேச சமூகம் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்தால், சூடான் பேரழிவு தரும் உணவு நெருக்கடியில் சிக்கக்கூடும் என்று கார்ல் ஸ்கோவ் தெரிவித்தார். சூடானின் பல்வேறு பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி அனுப்புவதைச் சூடானின் தொடர்புடைய தரப்புகள் உறுதி செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.