சீன-இந்திய எல்லைப் பிரச்சினை அமெரிக்காவுடன் தொடர்பு இல்லை
2024-03-21 18:14:04

சீன மற்றும் இந்திய எல்லை பிரச்சினை குறித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரின் கருத்து தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் லீன் ஜியான் 21ஆம் நாள் கேள்விக்குப் பதிலளிக்கையில், அதற்கு சீனா கடும் மனநிறைவின்மை மற்றும் எதிர்ப்பு தெரிவித்தது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லை தற்போதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. வரலாற்றில் ச்சாங் நன் பகுதி எப்போதும் சீனாவின் உரிமைப் பிரதேசமகாவே இருந்து வருகின்றது. இந்த உண்மை மறுக்கப்பட முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், சீன மற்றும் இந்திய எல்லைப் பிரச்சினையானது, சீனாவுக்கும் இநித்யாவுக்கும் இடையேயான விவகாரம். அமெரிக்காவுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், அமெரிக்கா எப்பொழுதும் தனது புவிசார் அரசியல் சுய நலன்களுக்கு சேவை செய்ய, மற்ற நாடுகளில் சர்ச்சைகளைத் தூண்டுவதற்கு பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.