முதலாவது அணு ஆற்றல் உச்சி மாநாடு நடைபெற்றது
2024-03-22 18:39:35

முதலாவது அணு ஆற்றல் உச்சி மாநாடு மார்ச் 21ஆம் நாள் பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்றது. இதில், புதைவடிவ எரிபொருட்கள் பயன்பாட்டைக் குறைப்பது, ஆற்றல் பாதுகாப்பை வலுப்படுத்துவது, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது உள்ளிட்ட உலகாளவிய அறைகூவல்களை எதிர்கொள்ளும்போது, அணு ஆற்றலின் பங்கு குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அணு ஆற்றல் வளர்ச்சி என்னும் தலைப்பில் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டில், 30க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள், உயர் நிலை பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் முதலியோர் பங்கெடுத்தனர்.

சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத் தலைவர் ஃபாத்திஹ் பிரோல் (Fatih Birol)இதில் கூறுகையில், அணு ஆற்றல் இல்லாமால், உலகில் காலநிலை மாற்றத்துக்கான குறிக்கோள் திட்டப்படி நிறைவேற்றப்பட முடியாது என்றும், முக்கிய புதுப்பிக்கத்த்க்க ஆற்றல்களை வளர்க்கும் திறன் இல்லாத நாடுகளில் அணு ஆற்றலே முக்கிய பங்காற்றும் என்று தெரிவித்தார்.