ஹைட்டி நிலைமை பற்றி ஐ.நா.பாதுகாப்பவையின் அறிக்கை
2024-03-22 10:31:37

ஐ.நா.பாதுகாப்பவை மார்ச் 21ஆம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஹைட்டியில் நடந்த வன்முறைத் தாக்குதலைக் கண்டித்துள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஹைட்டிக்குள் சட்டவிரோதமாகக் கொண்டு்வருவது குறித்து இந்த அறிக்கையில் கடும் கவலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,. தொடர்புடைய தீர்மானங்களின் படி ஹைட்டியின் மீது ஆயுதத் தடையாணையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா.வின் உறுப்பு நாடுகளுக்கு கடப்பாடு உண்டு என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் அறிக்கையில் ஹைட்டிக்கு வழங்கும் மனித நேய உதவிகளை  அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஹைட்டியர்கள் தலைமையிலான அரசியல் செயல்முறையை ஐ.நா.பாதுகாப்பவை முழுமையாக ஆதரிப்பதோடு, தொடர்புடைய தரப்புகள், உள்ளடக்கிய பேச்சுவார்த்தையின் மூலம் பரந்த அளவில் ஒத்த கருத்துக்களை தொடர்ந்து எட்ட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.