மின்சார வாகனத் துறையில் ஒத்துழைப்பு மூலம் வெற்றி பெறலாம்
2024-03-22 19:17:54

அண்மையில் சீனாவின் மின்சார வாகனங்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில் சில தடைகள் ஏற்படுத்துவது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியான் 22ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

மின்சார வாகனத் தொழிலானது, உலக மயமாக்க தொழிலாக இருக்கிறது. வேலைகளைப் பிரித்து ஒத்துழைப்பு மேற்கொண்டால் தான், பரஸ்பர நலன் அடையவும் கூட்டு வெற்றி பெறவும் முடியும். நியாயமான போட்டியினால் தான், தொழில் நுட்ப முன்னேற்றம் பெற முடியும். தொலைதூரப் பார்வையிலிருந்து, பாதுகாப்புவாதம் மற்றும் வர்த்தகத் தடை மேற்கொண்டால், இந்த நாடுகளின் தொழிலுக்கும் நுகர்வோரின் நலனுக்கும் சேதத்தை ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சீனாவின் மின்சார வாகனம் மீது மேலை நாடுகள் அச்சம் கொள்ள கூடாது. கூடுதல் சங்க வரி வசூலிப்பது போன்ற கட்டுபாடு ரீதியான நடவடிக்கைகள் வழியாக தனது போட்டியாற்றல் பிரச்சினையைத் தீர்வு காண துணை புரியாது என்று பல ஐரோப்பிய வாகனத் தயாரிப்புத் தொழில் நிறுவனங்களின் உயர் நிலை நிர்வாகிகளும் வணிக சங்கங்களும் கருத்து தெரிவித்துள்ளதாக லீன் ஜியான் கூறினார்.

தவிரவும், உலகளாவிய சந்தை போட்டியில் உருவான அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கம் மற்றும் சிறந்த தரம் ஆகிய காரணங்களால், சீன மின்சார வாகனம் அதிகளவில் வரவேற்பை பெற்று வருகின்றது. அதே வேளையில், சீனா எப்போதும் பன்னாட்டு வாகனத் தயாரிப்புத் தொழில் நிறுவனங்களுக்கு வாசலைத் திறந்திருக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் சீனச் சந்தையின் நலன்களை விரிவாக பெற்று வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.