இலங்கையில் கடல்சார் சுற்றுலாவை முன்னெடுக்கத் திட்டம்
2024-03-23 16:26:03

இலங்கையில் கடல்சார் சுற்றுலாத் திட்டத்தை இலங்கை சுற்றுலா வளர்ச்சி ஆணையமும், ஆசிய வளர்ச்சி வங்கியும் இணைந்து தொகுத்து இம்மாத இறுதிக்குள் வெளியிட உள்ளன.

இலங்கை மக்களிடம் படகு சவாரியை பரப்புவதுடன், படகு தயாரிப்பு முனையமாக இலங்கையை மாற்ற அந்நாட்டு கடல்சார் தொழில்துறை அமைப்பு திட்டமிட்டுள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் கௌஷல் ராஜபக்சே தெரிவித்தார்.

சிறிய அளவில் படகு சவாரிக்கான வசதிகளை அமைப்பதுடன், எதிர்காலத்தில் படகு கண்காட்சிக்கும் கடல்சார் தொழில்துறை அமைப்பு திட்டமிட்டுள்ளது.