பிப்ரவரியில் இலங்கையின் ஏற்றுமதி அதிகரிப்பு
2024-03-23 16:28:00

இலங்கையின் பிப்ரவரி மாத ஏற்றுமதி ஜனவரியை விட 1.3 விழுக்காடு அதிகரித்ததாக அந்நாட்டு ஏற்றுமதி வளர்ச்சி வாரியம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

குறிப்பாக, வேளாண் பொருள்களின் ஏற்றுமதி 11.82 விழுக்காடும்  வணிகப் பொருள்களின் ஏற்றுமதி 0.17 விழுக்காடும் அதிகரித்தன. அதேசமயம், தொழில்துறை ஏற்றுமதி கடந்த மாதத்தை விட 3.36 விழுக்காடு குறைந்தது.

முன்னதாக, கடந்த ஆண்டில் ஒட்டுமொத்த ஏற்றுமதி, 2022ஐ விட 0.39 விழுக்காடு குறைந்து 1,449 கோடி டாலர் பதிவானது.