உலக அமைதியைப் பாதிக்கும் நீர் வளம் பற்றாக்குறை: ஐ.நா அறிக்கை
2024-03-23 18:40:29

2024ஆம் ஆண்டு உலக நீர் வளத்தின் வளர்ச்சி பற்றிய ஐ.நா அறிக்கையை யுனேஸ்கோ அமைப்பு 22ஆம் நாள் வெளியிட்டது. நீர் வளத்தின் பற்றாக்குறை நிலைமை, உலகளவில் சர்ச்சையைத் தீவிரமாக்கி வருகிறது. அமைதியைப் பேணிகாக்கும் வகையில், பன்னாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 22ஆம் நாள் உலக நீர் தினமாகும். தற்போது வரை, உலகளவில் 220 கோடி மக்கள், பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் இன்னமும் அவதிப்பட்டு வருகின்றனர். 350 கோடி மக்கள், பாதுகாப்பான சுகாதார வசதியைப் பெற முடியவில்லை.  2002 முதல் 2021ஆம் ஆண்டு வரை, உலகில் 140 கோடிக்கும் அதிகமானோர் வறட்சியால் பாதிக்கப்பட்டனர் என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை நிலைமை மோசமாகுவது, உணவு பாதுகாப்பைப் பாதிப்பது, உடல் நல அபாயத்தைத் தீவிரமாக்குவது ஆகியவை நீர் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ளன என்றும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.