இவ்வாண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சீனா ஈர்த்த வெளிநாட்டு முதலீடு
2024-03-23 19:39:03

சீன வணிக அமைச்சகம் 22ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில், சீனாவில் புதிதாக 7160 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நிறுவப்பட்டன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 34.9 விழுக்காடு அதிகரித்தது. சீனா உண்மையாகப் பயன்படுத்திய வெளிநாட்டு முதலீட்டுத் தொகை, 21 ஆயிரத்து 509 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டில் இருந்ததை விட 19.9 விழுக்காடு குறைந்தது.

சீன வணிக அமைச்சகத்தின் வெளிநாட்டு முதலீட்டுப் பிரிவின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், சீனச் சந்தையின் வளர்ச்சி மீது பன்னாட்டு நிறுவனங்கள் இன்னும் நம்பிக்கை கொண்டு, சீனாவில் முதலீட்டை அதிகரித்து வருகின்றன என்று தெரிவித்தார்.

கடந்த இரு மாதங்களில், பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் சீனாவில் செய்த முதலீடு முறையே 585.8 விழுக்காடு, 399.3 விழுக்காடு, 144.5 விழுக்காடு மற்றும் 19.8 விழுக்காடு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.