ரஷியாவில் வலுப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
2024-03-23 17:24:36

ரஷியாவின் மாஸ்கோவில் மார்ச் 22ஆம் நாளிரவு நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் இதுவரை 90க்கும் மேலானோர் உயிரிழந்தனர். 100க்கும் மேலானோர் காயமுற்றனர்.

ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் இத்தாக்குலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, உயிரிழந்தோரின் குடும்பத்தினர், ரஷிய அரசு மற்றும் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பிரான்ஸ் அரசுத் தலைவர் மெக்ரோன் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களும் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

கடந்த 10க்கும் மேலான ஆண்டுகளில் ரஷியாவில் நிகழ்ந்த மிக கடுமையான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்று இதுவாகும். இத்தாக்குதலுக்குப் பிறகு, ரஷியாவின் பல இடங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.