ரஷியாவில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2024-03-23 19:30:54

ரஷியாவில் நிகழ்ந்த கடும் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மார்ச் 23ஆம் நாள் கூறுகையில், இத்தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமுற்றோர் மற்றும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மனமார்ந்த ஆறுதலையும் சீனா தெரிவித்தது. எந்த வடிவிலான பயங்கரவாதத்தையும் சீனா எதிர்க்கிறது. இப்பயங்கரவாதச் செயலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு ரஷியா மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளுக்கு உறுதியாக ஆதரவளிக்கிறது என்றார்.