ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு: விளையாட்டு பிடிக்கும் எங்களுக்கிடையே ஒலிம்பிக் நட்புறவு
2024-03-24 15:34:18

2022ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் நாள் மொனாக்கோ நாட்டின் தலைவர் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்றார்.

ஆல்பர்ட் மற்றும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிடையே உள்ள 6ஆவது சந்திப்பு இதுவாகும்.

2022ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் நாள் ஆல்பர்ட்டைச் சந்தித்த போது ஷிச்சின்பிங் கூறுகையில், பழைய நண்பரை மீண்டும் சந்திப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. எனக்கும் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட்க்கும் விளையாட்டு பிடிக்கும். இதனால், எங்களுக்கிடையே ஒலிம்பிக் நட்புறவு உருவாகியுள்ளது என்றார்.

ஷிச்சின்பிங் சீன அரசுத் தலைவராகப் பதவியேற்ற பின்பு, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சோச்சி குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட்டை முதன்முறையாகச் சந்தித்தார். அதே ஆண்டின் ஆகஸ்ட்டில், ஆல்பர்ட் சீனாவுக்கு வந்து நன்ஜிங் இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்றார்.

ஷிச்சின்பிங் கால்பந்து ரசிகர் ஆவார் என்பதைக் கேட்டறிந்த ஆல்பர்ட், 2018ஆம் ஆண்டு சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, தனது பெயரை அச்சிடப்பட்ட மொனாக்கோ கிளப் ஜெர்சியை ஷிச்சின்பிங்கிற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

விளையாட்டின் முக்கியத்துவம் ஷிச்சின்பிங்கிற்கு நன்கு தெரிந்துள்ளது என்று குறிப்பிட்ட ஆல்பர்ட், பெய்ஜிங், 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் நடத்தியதற்கு ஆதரவையும் அளித்தார். அதுமட்டுமல்லாது, சீன மக்கள் விளையாட்டுப் பயிற்சியில் பங்கேற்க வேண்டுமென்னும் விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.  

2019ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் நாள், இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் சீனாவில் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அரையாண்டுக்கு  பிறகு, ஷிச்சின்பிங் மொனாக்கோ வில் பயணம் மேற்கொண்டார். கடந்த 70க்கும் அதிகமான ஆண்டுகளில், சீனாவின் அதியுயர் தலைவர் முதல்முறையாக மொனாக்கோ வில் பயணம் மேற்கொண்டார்.

இது பற்றி ஆல்பர்ட் கூறுகையில், சீன அரசுத் தலைவர் மொனாக்கோ வில் பயணம் மேற்கொள்கின்றார் என்பதோடு மட்டுமல்லாமல், பெரிய நாடாகவும் உலக வல்லரசுகளில் ஒன்றாகவும் திகழும் நாட்டின் தலைவர் மொனாக்கோ வில் முதன்முறையாகப் பயணம் மேற்கொள்கின்றார் என்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கும் முக்கிய விஷயமாகும் என்றார்.

மொனாக்கோ வில் ஷிச்சின்பிங்கும் ஆல்பர்ட்டும் பல்துறை சார்ந்து உரையாடினர். காட்டு விலங்கின் பாதுகாப்பு அவற்றில் ஒன்று. கடந்த சில ஆண்டுகளில், ஆல்பர்ட் சொந்த நிதியத்தின் மூலம், சைபீரியப் புலியை பாதுகாப்பதற்கான தொடர் திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்தி வருகின்றார்.

2018ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் நாள் பெய்ஜிங்கில் ஷிச்சின்பிங கூறுகையில், சைபீரியப் புலி பாதுகாப்பு மண்டலத்தை நிறுவுவது குறித்து அவர் முடிவெடுத்தார். அதைத் தவிர, சைபீரிய சிறுத்தை பாதுகாப்பு மண்டலம் மற்றும் பனிச்சிறுத்தையின் வட மேற்கு மண்டலம் அடங்கும். இது பற்றி இளவரசர் பெரும் கவனம் செலுத்தியுள்ளதையும் எங்கள் பாதுகாப்புப் பணிகளுக்கும் ஆதரவளிப்பதையும் நான் அறிந்தேன். இது பற்றி நான் மிகவும் நன்றியுணர்ச்சியாக இருக்கிறேன் என்றார்.

அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்கும் சீன அரசுக்கும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான மனவுறுதி மற்றும் விருப்பம் இருக்கின்றது என்பது என் இதயத்தை மிகவும் தொட்டது என்று ஆல்பர்ட் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகம் என்ற முன்னெடுப்பை நான் அறிந்து கொண்டேன். மனிதகுலத்தின் எதிர்காலம் மீது அக்கறை  செலுத்துவது மிக நல்ல ஆலோசனையாகும். இது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தொலைநோக்கு பார்வையை நிரூபித்துள்ளது என்றார்.