காசாவில் போர் நிறுத்தம் குறித்து குட்ரேஸ் வேண்டுகோள்
2024-03-24 19:10:06

ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் மார்ச் 23ஆம் நாள் எகிப்துக்கும் காசா பிரதேசத்துக்கும் இடையிலான ரஃபா துறைமுகத்தில் பயணம் மேற்கொண்டபோது, காசா பிரதேசத்தில் உடனடியாக போர் நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

உதவிப் பொருட்கள் காசா பிரதேசத்துக்கு அனுப்பப்படுவதை உத்தரவாதம் செய்யும் வகையில், ஐ.நா, எகிப்துடன் தொடர்ந்து ஒத்துழைப்புகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார். காசா மக்களுக்கு முழுமூச்சுடன் ஆதரவு அளித்து வருகின்ற எகிப்துக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

காசா பிரதேசத்தின் சுகாதார அமைப்பு 23ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த அக்டோபர் 7ஆம் நாள் புதிய சுற்று மோதல் ஏற்பட்டது முதல் இதுவரை, காசாவில் 32 ஆயிரத்து 100க்கும் மேலானோர் உயிரிழந்தனர். 74 ஆயிரத்துக்கும் மேலானோர் காயமுற்றனர்.