ச்சாங்ஷா நகரில் காச நோய் தடுப்பு பற்றிய பெங் லீயுவானின் ஆய்வுப் பயணம்
2024-03-24 16:50:51

காச நோய் மற்றும் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பணிக்கான உலக சுகாதார அமைப்பின் நல்லெண்ண தூதர் பெங் லீயுவான் அண்மையில் ஹுநான் மாநிலத்தின் ச்சாங்ஷா நகரில், காச நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பணியை ஆய்வு மேற்கொண்டார்.

இந்நகரின் யூஹுவா பிரதேசத்தின் ஆரோக்கியக் கல்வி அரங்கில், உள்ளூர் காச நோய் தடுப்பு அமைப்பு முறை கட்டுமானத்தை பெங் லீயுவான் அறிந்து கொண்டதோடு, குடியிருப்புப் பகுதியிலும், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையேயும் இந்நோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை மேலும் நன்றாகப் பரவல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், தொங்ஜிங் குடியிருப்புப் பிரதேசத்தின் சுகாதாரச் சேவை மையத்தைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்களைச் சந்தித்த அவர், இந்நோய் சிகிச்சை சேவை மற்றும் நிர்வாகப் பணிகளை அறிந்து கொண்டார். அனைவரும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு, காச நோய் நீக்குவதற்கு கூட்டாகப் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.