சீன வளர்ச்சி கருத்தரங்கின் 2024ஆம் ஆண்டுக்கூட்டத்தில் லீ ச்சியாங் உரை
2024-03-24 17:30:29

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் மார்ச் 24ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன வளர்ச்சி மன்றத்தின் 2024ஆம் ஆண்டுக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், கடந்த ஆண்டு, ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தலைமையில், சீனா இன்னல்களைச் சமாளித்து, முழு ஆண்டின் பொருளாதார சமூக வளர்ச்சியின் முக்கிய இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றியது. சீனப் பொருளாதாரம் மீட்சியடையும் போக்கு தொடர்ந்து வலுப்பட்டு வருகிறது. புதிய தொழில், புதிய மாதிரி மற்றும் புதிய இயக்கு ஆற்றல் வேகமாக வளர்ந்து வருகின்றன என்று தெரிவித்தார்.

தற்போது சர்வதேச சூழ்நிலையில் ஆழ்ந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி பல கடும் அறைகூவல்களைச் சந்தித்துள்ளது. எதார்த்தமான பயன்தரும் நடவடிக்கை மூலம் உயர் தர வளர்ச்சியை சீனா முன்னேற்றி, உலகப் பொருளாதாரத்தின் மீட்சி மற்றும் நிலைத்தன்மைக்கு மேலதிக உறுதித்தன்மையையும் சாதகமான இயக்கு ஆற்றலையும் ஊட்டும் என்றும், சீனாவின் திறப்புக் கொள்கை, பன்னாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றிக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.