திறப்பு மூலம் வளர்ச்சியை முன்னேற்றி வருகின்ற சீனா
2024-03-25 17:19:22

சீன வளர்ச்சி மன்றத்தின் 2024ஆம் ஆண்டுக்கூட்டம் மார்ச் 24ஆம் நாள் துவங்கியது. இந்நிலையில், “சீனாவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான வாய்ப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு” என்ற தலைப்பிலான ஆய்வுக்கூட்டம் 25ஆம் நாள் முற்பகல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீன வணிகத் துணை அமைச்சர் குவோ டிங்டிங் கூறுகையில், உயர்நிலை வெளிநாட்டுத் திறப்பு அளவை சீனா மேலும் விரிவுபடுத்தி, திறப்பு மூலம் வளர்ச்சியை முன்னேற்றி, சந்தையில் மேலதிக வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.

மேலும், உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு சந்தையை சீனா திறந்து வைத்து, வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்தி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், சீன மக்களின் நபர்வாரி சேவைக்கான நுகர்வு விகிதம் 39.7 விழுக்காட்டிலிருந்து 45.2 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அத்துடன், புது ரக நகரமயமாக்கம், முன்னேறிய தயாரிப்புத் துறை, பசுமை மற்றும் கரி குறைந்த வளர்ச்சி முறை மாற்றம் உள்ளிட்ட துறைகளில், சீனா தொடர்ச்சியாக பெரும் தேவையை ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.