போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டம் துவக்கம்
2024-03-26 11:10:56

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 26ஆம் நாள் தொடங்கியது. 4 நாட்கள் நீடிக்கும் போ ஆவ் மன்றம் 40க்கும் மேற்பட்ட துணை மன்ற நிகழ்வுகளை நடத்த உள்ளது. “ஆசியா மற்றும் உலகம்:கூட்டு அறைகூவல்கள், கூட்டு பொறுப்புகள்” இக்கூட்டத்தின் தலைப்பாகும்.

இக்கூட்டம் தொடர்பான செய்தியாளர் கூட்டம் மார்ச் 26ஆம் நாள் காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மன்ற நடவடிக்கைகள் முதலியவை தொடர்புடைய நிலைமை விவரிக்கப்பட்டது. ஆசிய பொருளாதார எதிர்காலம் மற்றும் ஒருங்கிணைப்பு செயல்முறை குறித்த 2024ஆம் ஆண்டு அறிக்கை, தொடரவல்ல வளர்ச்சி வாய்ந்த ஆசியா மற்றும் உலகம் பற்றிய  2024ஆம் ஆண்டு அறிக்கை ஆகியவை வெளியிடப்பட்டன.