இந்திய வெளியுறவு அமைச்சரின் கருத்திற்கு சீனா மறுப்பு
2024-03-26 10:24:06

இந்திய-சீன எல்லை விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சரின் கருத்துக்களுக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லிச்சியென் 25ஆம் நாள் பதிலளித்தார். அவர் கூறுகையில்,

இரு தரப்புகளுக்கிடையில் எல்லை வரைந்து தீர்மானிக்கப்படவில்லை. கிழக்கு, மத்தியம், மேற்கு, சிக்கிம் முதலிய பகுதிகள் இதில் அடக்கம். கிழக்கு சாங்நான் பகுதி, சீனாவின் உரிமை பிரதேசமாகும். இப்பகுதியை இந்தியா சட்டப்பூர்வமற்ற முறையில் கைப்பற்றுவதற்கு முன்பு, இப்பகுதி மீதான நிர்வாக அதிகாரம் சீனாவுக்கு உண்டு. இந்த அடிப்படை உண்மை மறுக்க முடியாதது என்றார் அவர்.

1987ஆம் ஆண்டு, இந்தியாவில் கூறப்படும் அருணாச்சாலப் பிரதேச மாநிலத்தை இந்தியா கைப்பற்றியது என்பது சட்டவிரோதமானது. அப்பொழுது, சீனா இதற்கு உறுதியாக எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவின் இச்செயல் பயனற்றது. இது குறித்து சீனாவின் நிலைப்பாடு மாறப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.