ரமதானின் போது காசாவில் போர் நிறுத்தம் வேண்டிய தீர்மானத்தைப் பாதுகாப்பவை நிறைவேற்றுதல்
2024-03-26 09:57:03

நீண்டகாலம் நீடிக்கும் போர் நிறுத்தத்தை நனவாக்கும் வகையில், ரமதான் காலத்தின் போது காசா பிரதேசத்தில் போர் நிறுத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென 25ஆம் நாள் ஐ.நா பாதுகாப்பவையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

கடந்த அக்டோபர் 7ஆம் நாள் பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே புதிய மோதல் ஏற்பட்டது முதல் இதுவரை, காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வயியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பவை முதன்முறையாக நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. அன்றைய வாக்கெடுப்பில் சீனா உள்ளிட்ட 14 பாதுகாப்பவையின் உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை.

உடனடி போர் நிறுத்தம் தவிர, பிணைக் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுவித்து அவர்களுக்கு மனிதநேய உதவி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், சர்வதேச சட்ட விதிகளின் தொடர்புடைய கடப்பாடுகளைப் பல்வேறு தரப்புகள் பின்பற்ற வேண்டும் என்றும் இத்தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.