சீன, இலங்கை தலைமையமைச்சர்கள் பேச்சுவார்த்தை
2024-03-26 20:17:22

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் மார்ச் 26ஆம் நாள் முற்பகல் சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தலைமையமைச்சர் குனாவர்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

லீ ச்சியாங் கூறுகையில், இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 67 ஆண்டுகளில், இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, நன்மை பெறுகின்றன. இலங்கையுடன் இணைந்து, இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டிய முக்கிய பொது கருத்துக்களைச் சீராக செயல்படுத்தி, பாரம்பரிய நட்புறவை தொடர்ந்து நிலைநிறுத்தி, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, பல்வேறு துறைகளிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலதிக சீனத் தொழில் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்து தொழில் நடத்துவதை சீனா ஊக்குவிக்கிறது. இலங்கை சீனத் தொழில் நிறுவனங்களுக்கு சிறந்த வணிக சூழலை வழங்க வேண்டும் என விரும்புவதாகவும் லீ ச்சியாங் தெரிவித்தார்.