சீனாவின் நுகர்வு சந்தை சீராக மீட்சி
2024-03-26 17:30:10

சீனாவின் நுகர்வு சந்தை தொடர்ந்து சீராக மீட்சி அடைந்து, நிதானமாக அதிகரித்து வரும் போக்கினை நிலைநிறுத்துகிறது என்று சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் மார்ச் 26ஆம் நாள் பிற்பகல் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சீன வணிக அமைச்சகத்தின் துணை அமைச்சர் குவோ டிங்டிங் தெரிவித்தார்.

அவர் கூறுகையில் வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் முதலியவற்றின் நுகர்வு சீராக வளர்ந்து வருகிறது. வணிகப் பொருட்களின் சில்லறை விற்பனைத் தொகை, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 4.6 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றார்.

உணவு மற்றும் சுற்றுலா முதலிய சேவை நுகர்வின் உயிராற்றல் வலுப்பட்டு வருகிறது. விடுமுறை பொருளாதாரத்தின் தூண்டுதலுடன், சேவை துறை நுகர்வின் உள்ளார்ந்த ஆற்றல் மேலும் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் முதல் இரண்டு மாதங்களில், உணவு துறை வருமானம், கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 12.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. சேவைத் துறையின் சில்லறை விற்பனைத் தொகை 12.3 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்,

மேலும், எண்ணியல் நுகர்வு மற்றும் பசுமை நுகர்வு உள்ளிட்ட புது ரக நுக்ரவு சுறுசுறுப்பாக வளர்ந்து வருகிறது. இவ்வாண்டின் முதல் இரண்டு மாதங்களில், நாடு முழுவதிலும் உள்ள இணைய சில்லறை விற்பனை தொகை கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 15.3 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.