மாஸ்கோவில் பயங்கரவாத தாக்குதல் பற்றிய புலனாய்வில் மேலை நாட்டின் உதவி தேவையில்லை: ரஷியா
2024-03-27 10:23:05

மாஸ்கோவிலுள்ள இசை மண்டபத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த புலனாய்வை ரஷியா தாமாகவே மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ராவ்ரோவ் 26ஆம் நாள் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இதில் மேலை நாட்டிலிருந்து எந்த உதவியும் தேவையில்லை. ஏனென்றால் இத்தாக்குதலில் திரைக்குப் பின்னால் தீவிரவாத அமைப்பு இருக்கும் என்றும் உக்ரைனுக்கு அதில் தொடர்பு இல்லை என்றும் மேலை நாடுகள் பரப்புரை செய்ய விரும்புகிறது என்றார்.

இந்தப் பயங்கரவாத தாக்குதலுடன் உக்ரைன் தொடர்பு உண்டு என்று புதின் இதற்கு முன்பு குறிப்பிட்டார். ஆனால், இதில் உக்ரைன் பங்கேற்றதை ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல மேலை நாடுகள் 25ஆம் நாள் நிராகரித்துள்ளன.