சீனாவின் தொழில் நிறுவனங்களின் இலாபத்தின் அதிகரிப்பு
2024-03-27 11:11:33

சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் மார்ச் 27ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, ஜனவரி முதல் பிப்ரவரி வரை, தேசியளவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் இலாபத் தொகை 91 ஆயிரத்து 406 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் அதே காலத்தைக் காட்டிலும் 10.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அதேபோல், இத்தொழில் நிறுவனங்களின் விற்பனைத் தொகை 19 இலட்சத்து 44 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட 4.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

பிப்ரவரி இறுதிக்குள், இத்தகைய நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு ஒரு கோடியே 67 இலட்சத்து 83 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.5 விழுக்காடு அதிகம்.