போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டத்தின் துவக்க விழாவில் ஸாவ் லெஜீ உரை
2024-03-28 19:49:16

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 28ஆம் நாள் முற்பகல் துவங்கியது. சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் தலைவர் ஸாவ் லெஜீ இத்துவக்க விழாவில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார். கசகஸ்தான், நவ்ரு, இலங்கை, டொமினிக்கா, கம்போடியா, ரஷியா உள்ளிட்ட 60க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல், தொழில் மற்றும் வணிகம், சிந்தனை கிடங்கு ஆகியவற்றின் 1500க்கும் மேலான பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

ஸாவ் லெஜீ கூறுகையில், மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் சந்தினையுடன், ஆசியாவின் பொது எதிர்காலச் சமூகத்தைக் கூட்டாக உருவாக்கி, அமைதி, நிதானம், செழுமை, அழகு, நட்புறவு ஆகியவற்றைக் கொண்ட ஆசியத் தாயகத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

மேலும், உயர்தர வளர்ச்சியின் மூலம் சீனப் பாணி நவீனமயமாக்கத்தை சீனா பன்முகங்களிலும் முன்னேற்றி வருகிறது. உலகப் பொருளாதாரத்துக்கு வலிமைமிக்க இயக்காற்றலை இது ஊட்டும் அதேவேளையில், பல்வேறு நாடுகளின் வளர்ச்சி குறிப்பாக ஆசிய நாடுகளின் வளர்ச்சிக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.