உலக புவியியல் பூங்கா பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சீனாவின் 6 புவியியல் பூங்காக்கள்
2024-03-28 19:35:08

மார்ச் 27ஆம் நாள் பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்ற யுனேஸ்கோவின் செயல் ஆணையத்தின் கூட்டத்தில் சீனா பரிந்துரை செய்த ஜி லின் மாநிலத்தின் சாங் பை ஷான் மலை, ஃபு ஜியன் மாநிலத்தின் லுங் யன், ஜியாங் சி மாநிலத்தின வூ குங் மலை, ஹுபெய் மாநிலத்தின் என்ஷி பெரியப் பள்ளத்தாக்கு-டெங் லுங் குழி, குய் சோ மாநிலத்தின் சிங் யீ மற்றும் கன்சு மாநிலத்தின் லின் சியா முதலிய 6 புவியியல் பூங்காக்கள், யுனேஸ்கோவின் உலக புவியியல் பூங்கா என்ற பெருமையைப் பெற்றுள்ளன. தற்போது, சீனாவில் உள்ள உலக புவியியல் பூங்காக்களின் எண்ணிக்கை 47ஆகும். இது உலகில் முதலிடம் வகிக்கிறது என்று சீனத் தேசிய வனத் தொழில் மற்றும் புல்வெளி அலுவலகம் 28ஆம் நாள் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக புவியியல் பூங்கா, உலக மரபுச் செல்வம், மனிதர் மற்றும் உயிரின வளைய பாதுகாப்பு மண்டலம் ஆகியவை, யுனேஸ்கோவின் மூன்று பெரிய தொழில் சின்னங்கள் என அழைக்கப்பட்டன.

உலகில் 213 உலக புவியியல் பூங்காக்கள் உள்ளன. அவை 48 நாடுகளைச் சேர்ந்தவை.