போ ஆவ் ஆசிய மன்றக் கூட்டத்தில் முக்கிய கருப்பொருள் : உயர்தரமான உற்பத்தித் திறன்
2024-03-28 10:39:43

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டத்தில் பல்வேறு கருத்தரங்குகளுக்கு விதவிதமான  தலைப்புகள் உண்டு. அவற்றில் உயர்தரமான உற்பத்தித் திறன் என்பது கருத்தரங்குகளில் பங்கேற்கும் விருந்தினர்களிடையில் அதிகமாக விவாதிக்கப்பட்ட அம்சமாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டின்படி, 2024ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரம் 3.1விழுக்காடு வளர்ச்சியடையவுள்ளது. ஆனால், 2008ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த கணக்கீடு 4.5விழுக்காடு அளவில் இருந்தது. இந்நிலையில், உயர்தரமான உற்பத்தித் திறன் புதிய வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு வரக் கூடுமென உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய கிளை கருத்தரங்கில் பங்கேற்ற விருந்தினர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், சீனாவைப் பொறுத்தவரை, உயர்தரமான உற்பத்தித் திறனுக்குப் புதிய சிந்தனை, புதிய கண்ணோட்டம் மற்றும் புதிய நடவடிக்கை கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கருதினர்.