இந்தியாவின் முக்கிய தொழில்துறை உற்பத்தி 6.7 விழுக்காடு அதிகரிப்பு
2024-03-29 17:18:03

பிப்ரவரி மாதம், இந்தியாவின் எட்டு முக்கிய தொழில்களான சிமென்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் எஃகு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த உற்பத்தி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று வியாழனன்று வெளியிடப்பட்ட  தரவுகள் தெரிவிக்கின்றன. தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் இந்த எட்டு முக்கிய தொழில்கள் 40.27 விழுக்காடு வகிக்கின்றது.

சிமென்ட் உற்பத்தி 10.2 விழுக்காடு, நிலக்கரி உற்பத்தி 11.6 விழுக்காடு, கச்சா எண்ணெய் உற்பத்தி 7.9 விழுக்காடு மற்றும்  மின் உற்பத்தி 6.3 விழுக்காடு அதிகரிப்பை கண்டுள்ளது. மேலும், உர உற்பத்தி 9.5 விழுக்காடு குறைந்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி 11.3 விழுக்காடு, பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை உற்பத்தி 2.6 விழுக்காடு மற்றும் எஃகு உற்பத்தி 8.4 விழுக்காடு அதிகரிப்பை கண்டுள்ளது.

ஏப்ரல் 2023 முதல் பிப்ரவரி 2024 வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில், எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.7 விழுக்காடாக இருந்தது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.