போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டம் நிறைவு
2024-03-29 19:14:40

4 நாட்கள் நீடித்த போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டம் 29ம் நாள் மாலை போ ஆவ் நகரில் நிறைவடைந்தது. 60க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 2000 பிரதிநிதிகள் அக்கூட்டத்தில் பங்கெடுத்து, ஆசியா மற்றும் உலகின் நிலைமையை விவாதித்து, ஒத்த கருத்துகளை எட்டியுள்ளனர்.

4 நாட்களில் சுமார் 40 கிளை கருத்தரங்குகள், 110 ஊடகப் பேட்டிகள் மற்றும் செய்தியாளர் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டு கூட்டத்தில், ஒற்றுமை ஒத்துழைப்பு மூலம் சவால்களைச் சமாளிப்பது, ஆசிய தலைமையில் உருவாகி வரும் தொடரவல்ல புதிய யுகம், உலக பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சிக்கு சீனாவின் முக்கிய பங்கு, வளர்ச்சியை முன்னெடுப்பதற்குப் புத்தாக்கத்தின் சக்தி, காலநிலை மாற்றத்துக்கான நடவடிக்கை முதலிய அம்சங்கள் குறித்து ஒத்த கருத்துகள் பல எட்டப்பட்டுள்ளன.

சர்வதேச சமூகம், ஞானம், துணிவு மற்றும் பொறுமையைக் கடைப்பிடித்து, ஒரு மனதுடன் செயல்பட்டு, மனித குலத்துக்குச் செழுமையான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று பல்வேறு பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.