சீனா, உயர்தர வளர்ச்சி சாதனைகளைப் பெறுகிறது
2024-03-31 20:46:28

சீனாவின் உயர்தர வளர்ச்சி மற்றும் 2035ஆம் ஆண்டு வளர்ச்சி போக்கு பற்றிய ஐந்து நாடுகளின் ஒத்துழைப்பு சிந்தனை கிடங்கு அறிக்கை வெளியீட்டு விழாவும் சர்வதேச கலந்தாய்வுக் கூட்டமும் 31ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றன. கடந்த சில ஆண்டுகளாக புதிய மக்கள் வாழ்வாதாரம், புதிய நுகர்வு, புதிய தயாரிப்பு, புதிய அடிப்படை கட்டுமானம், புதிய சேவை ஆகிய துறைகளில் சீனாவின் உயர்தர வளர்ச்சி நிறைய சாதனைகளைப் பெற்று வருகிறது என்று இவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது. சீன ரன்மின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூங்யாங் நிதி ஆய்வகம், அமெரிக்கா, ரஷியா, கனடா, இந்தியா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பு சிந்தனை கிடங்குகளுடன் இணைந்து, இவ்வறிக்கையை கூட்டாக வெளியிட்டது. இந்தியா பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்ற மேயத்தின் பொது செயலாளர் முகமது சச்சிப் கூறுகையில், சீனா, புத்தாக்கம், சீர்திருத்தம், நாட்டுத் திறப்பு, தொடரவல்ல வளர்ச்சி ஆகியவற்றுடன் உயர்தர வளர்ச்சியை நனவாக்கி வருகிறது. மக்களின் நலனை உயர்த்தி, தொழில் நுட்ப முன்னேற்றத்தை விரைவுபடுத்தி, உலக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம், சீனா, இதர நாடுகளுக்கு மாதிரியாக மாறியுள்ளதுடன் மக்கள் மனித குலத்தின் இன்பமான எதிர்கால வாழ்வுக்கும் வழிவகுத்துள்ளது என்று தெரிவித்தார்.