சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மானுட பரிமாற்றத்துக்கான உயர் நிலை பேச்சுவார்த்தை கூட்டம்
2024-03-31 18:51:50

சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே மானுட பரிமாற்றத்துக்கான உயர் நிலை பேச்சுவார்த்தை அமைப்புமுறையின் 6ஆவது கூட்டம் மார்ச் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசவை உறுப்பினர் ஷென் யீஜின் அம்மையார், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் புத்தாக்கம், ஆய்வு, பண்பாடு, கல்வி மற்றும் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பான உறுப்பினர் இவனோவா அம்மையார் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஷென் யீஜின் கூறுகையில், இரு தரப்பும் மக்களின் பரிமாற்றத்தை மேலும் எளிமைப்படுத்துவதோடு, கல்வி, அறிவியல் தொழில் நுட்பம், பண்பாடு, ஊடகம், விளையாட்டு, இளைஞர்கள், பெண்கள் முதலிய துறைகளில் ஒத்துழைப்புக்கு பயனுள்ள முறையில் ஊக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே மானுட பரிமாற்ற ஒத்துழைப்பு மூலம் பெறப்பட்டுள்ள சாதனைகளை இவனோவா பாராட்டினார். மேலும், சீனாவுடன் இணைந்து, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சீனாவுக்கும் இடையே மானுட பரிமாற்றம் மற்றும் நடைமுறை ரீதியிலான ஒத்துழைப்பு இடைவிடாமல் புதிய சாதனைகள் படைக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.