லாவோஸ் வியட்நாம் மற்றும் கிழக்குத் திமோரின் விருந்தினர்கள் சீனாவில் பயணம்
2024-04-01 20:08:27

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீயின் அழைப்பை ஏற்று, லாவோஸ் துணை தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான சலெம்க்சேய், வியட்நாம் வெளியுறவு அமைச்சர் புய் தன்சுன், கிழக்குத் திமோரின் வெளியுறவு அமைச்சர் பென்டிதோ பிரேதஸ் ஏப்ரல் திங்கள் 2 முதல் 5ஆம் நாள் வரை தனித்தனியாக சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங்வென்பின் இச்செய்தியை அறிவித்தார்.