சீன மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரின் பேச்சுவார்த்தை
2024-04-01 20:08:45

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் செஜோர்னுடன்(Stephane Sejourne)ஏப்ரல் முதல் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வாங்யீ கூறுகையில், இவ்வாண்டு சீனாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆம் ஆண்டு நிறைவு. பிரான்ஸுடன் இணைந்து, இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள நெடுநோக்கு ரீதியிலான ஒத்த கருத்துகளின் தலைமையில், பாரம்பரியத்தைப் பராமரித்து, எதிர்காலத்தை எதிர்கொண்டு செயல்பட சீனா விரும்புவதாக தெரிவித்தார்.

செஜோர்ன் கூறுகையில், சீனாவுடனான உறவை பிரான்ஸ் உயர்ந்த முக்கியத்துவம் அளிக்கிறது. பொருளாதாரம், வர்த்தகம், வேளாண்மை, பசுமை வளர்ச்சி, ஏ.ஐ. உட்பட்ட துறைகளிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, மானுடப் பரிமாற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். மேலும், பிரான்ஸ் திறப்பு மற்றும் ஒத்துழைப்பைக் கடைப்பிடிப்பதோடு, சீனாவுடனான தொடர்பிலிருந்து பிரான்ஸ் விலக வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்தார்.