ஜப்பான் தலைமையமைச்சருக்கான ஆதரவு விகிதம் வீழ்ச்சி
2024-04-01 11:25:30

ஜப்பானின் டி.பி.எஸ் தொலைகாட்சி நிலையம் 31ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி, அண்மையில் ஜெ.என்.என் செய்தி இணையதளத்தால் ஜப்பானில் நடத்தப்பட்ட புதிய பொது மக்கள் கருத்துக் கணிப்பின் படி, அந்நாட்டின் தலைமையமைச்சர் ஃபுமியோ கிஷிடாக்கான ஆதரவு விகிதம் 22.8 விழுக்காடாக உள்ளது. இவ்விகிதம் ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட 0.1 விழுக்காடு குறைந்துள்ளது. 2021ஆம் ஆண்டில் ஜப்பானிய அரச்சரவை நிறுவப்பட்ட பிறகு மிக தாழ்ந்த நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.