பால்டிமோர் பாலத்தின் புனரமைப்புக்கு யார் நிதியளிப்பார்கள் என்பது பற்றிய அமெரிக்க இரு கட்சிகளுக்கிடையில் போட்டி
2024-04-01 09:41:15

பாலம் இடிந்து விழுந்த பின்னர் சிதிலங்களைச் சுத்தம் செய்வதற்கும் பால்டிமோர் துறைமுகத்தை மீண்டும் திறப்பதற்கும் தேவையான நேரத்தை தற்போது இன்னும் தீர்மானிக்க முடியவில்லை என்று மார்ச் 31ஆம் நாள் அமெரிக்கப் போக்குவரத்து அமைச்சர் பீட் புட்டிஜீக் தெரிவித்தார்.

தற்போது, பணியாளர்கள் பாலத்தின் சில பகுதிகளை அகற்றத் தொடங்கியுள்ளனர். ஆனால், இப்பாலத்தின் புனரமைப்புக்கு யார் நிதியளிப்பார்கள் என்பதைச் சுற்றி, அமெரிக்காவில் இரு கட்சிகளுக்குமிடையில் மீண்டும் போட்டி ஏற்பட்டுள்ளது. இப்பாலத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பெரும் செலவை அமெரிக்க கூட்டாட்சி அரசு ஏற்கும் என்று அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் மார்ச் 26ஆம் நாள் தெரிவித்தார். ஆனால், அரசு செலவுப் பிரச்சினையில் பழமைவாத மனப்பான்மையுடன் குடியரசுக் கட்சியினர் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை ஏப்ரல் நடுப்பகுதியில் இப்பிரச்சினை குறித்து விவாதிக்கவுள்ளது.