பெய்ஜிங்கின் மைய பகுதியின் மீது பாதுகாப்பு
2024-04-02 14:44:38

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளைப் பிரித்து வைக்கும் சாலை, மொத்தம் 7.8 கிலோமீட்டர் ஆகும். இதன் இரு பக்கங்களில் சீன வரலாற்றின் முக்கியமான நினைவுக் கட்டிடங்கள் மற்றும் புகழ் பெற்ற கட்டிடக் கூட்டங்கள் அமைந்துள்ளன. 

இந்த மைய பகுதியின் பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் இம்மத்திய சாலை பண்பாட்டுக்கான 2024ம் ஆண்டு மரபுச் செல்வப் பரவல் மற்றும் புத்தாக்கப் போட்டி அண்மையில் துவங்கியது. மொத்தம் 6 கிளை போட்டிகள் பொது மக்களுக்காக நடத்தப்பட்டன. இலக்கியம், ஓவியக் கலை, வடிவமைப்பு முதலிய துறைகளின் திறமைசாலிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.