பி.எம்.ஐ. உட்பட்ட பொருளாதாரக் குறியீடுகள் அதிகரிப்பு
2024-04-02 19:40:35

சீனத் தயாரிப்புத் தொழில்துறை கொள்வனவு மேலாளர் குறியீடு (பி.எம்.ஐ.), தயாரிப்பு சாராத வணிகச் செயல்பாடு குறியீடு என இரண்டும் மார்ச் திங்களில் அதிகரித்த செய்தி, அதிக சர்வதேச ஊடகங்களில் வெளியானது. சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய இயந்திர ஆற்றல் ஏற்பட்டுள்ளதை தொடர்புடைய தரவுகள் காட்டுகின்றது என்று இந்த ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளன.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங்வென்பின் 2ஆம் நாள் கூறுகையில்,

பி.எம்.ஐ. உள்ளிட்ட மூன்று பெரிய குறியீடுகள் அனைத்தும் அதிகரித்த போது, விரிவடையும் கட்டத்தில் உள்ளன. சீனப் பொருளாதாரச் செயல்பாடு நன்கிற்கு வளரும் நிலைமை தொடர்ந்து, உள் விசை ஆற்றல் அதிகரித்து வருகின்றதை இது காட்டியுள்ளதாக தெரிவித்தார்.