முதல் 2 மாதங்களில் சீனாவின் வர்த்தக சேவைக்கு விரைவான வளர்ச்சி
2024-04-03 20:26:48

இவ்வாண்டின் முதல் 2 மாதங்களில், சீனாவின் மொத்த சேவை ஏற்றுமதி இறக்குமதி தொகை, ஒரு இலட்சத்து 19ஆயிரம் 7கோடி யுவான் ஆகும். இது, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 22.8விழுக்காடு அதிகமாகும். சீனாவின் வர்த்தகச் சேவை விரைவாக அதிகரித்து வருகின்றது என்று சீன வணிகத் துறை அமைச்சகம் 3ஆம் நாள் வெளியிட்ட தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

இதில், அறிவு சார் சேவை தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. முதல் 2 மாதங்களில், இத்துறையின் ஏற்றுமதி இறக்குமதி தொகை 46ஆயிரத்து 487கோடி யுவான் இருந்து, 14.2விழுக்காடு அதிகரித்தது. மேலும், சுற்றுலா சேவை துறை தீவிர வளர்ச்சி அடைந்துள்ளது. அது, 51.8விழுக்காட்டு வளர்ச்சியுடன், சுற்றுலா சேவைக்கான ஏற்றுமதி இறக்குமதி தொகை 31ஆயிரத்து 793கோடி யுவான் இருந்தது. இது, வர்த்தக சேவைத் துறையில் அதிக வருவாயை ஈட்டி முதல் இடத்தை பிடித்துள்ளது.