சிரியாவுக்கான ஈரானின் தூதரகம் மீதான தாக்குதலுக்குச் சீனா கண்டனம்
2024-04-03 09:51:07

சிரியாவுக்கான ஈரானின் தூதரகம் மீதான தாக்குதலைச் சீனா கண்டித்துள்ளது. தூதாண்மை நிறுவனங்களின் பாதுகாப்பைச் சீர்குலைக்க கூடாது. சிரியாவின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிரதேச  ஒருமைப்பாடு ஆகியவை மதிக்கப்பட வேண்டும்.

தற்போது கொந்தளிப்பான நிலைமையிலுல்ள மத்திய கிழக்கு பகுதியில், பதற்ற அதிகரிக்க வழிவகுக்கும் எந்தவொரு செயலையும் சீனா எதிர்க்கின்றது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் ஏப்ரல் 2ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.