சீனாவில் வரவுள்ள குறுகிய கால விடுமுறையின்போது ரயில் வழிப்பயணம் அதிகரிப்பு
2024-04-03 20:20:51

ஏப்ரல் 4முதல் 6ஆம் நாள் வரை சீனாவின் ஜிங் மிங் தினத்துக்கான விடுமுறை நாட்கள் வரவுள்ளது. ஏப்ரல் 3ஆம் நாள் முதல் 7ஆம் நாள் வரை, நாடு முழுவதும் 7கோடியே 50ஆயிரம் பேர் ரயில் மூலமாக பயணம் மேற்கொள்வர் எனவும், 4ஆம் நாளில் பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 75இலட்சம் இருப்பதுடன் அதிகபட்ச அளவை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீனத் தேசிய ரயில் குழுமத்தின் போக்குவரத்துத் துறைப் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், இவ்வாண்டின் ஜிங் மிங் தின விடுமுறை நாட்களின்போது, உற்றார் உறவினர்களைப் பார்த்தல், மறைந்த முன்னோர்கள் நினைவு இடங்களில் மரியாதை, இன்ப சுற்றுலா முதலிய இலக்குகளுடன் பயணம் மேற்கொள்ள பயணிகளுக்கு அதிக தேவைகள் உள்ளது என்று தெரிவித்தார். மேலும், ரயில் சீட்டை வாங்கும் தரவுகளுக்குப் பொறுத்த வரை, பெய்ஜிங், குவாங்சோ, ஷாங்காய், சென்தூ, வூஹான் போன்ற நகரங்களுக்குச் செல்லும் பயணிகள் மிக அதிகமாக உள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.