காசா பகுதியில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பு
2024-04-03 11:17:32

காசா பகுதியில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் தீவிரமாக அதிகரித்து வருகிறது. ஏராளமான குழந்தைகளின் உடல் எடை சாதாரண நிலையை எட்டவில்லை என்று உலக சுகாதார அமைப்பு ஏப்ரல் 2ஆம் நாள் தெரிவித்தது.

பல மருத்துவர்கள் அறிக்கையில் கூறுகையில், குழந்தைகள் எடை குறைவாக பிறப்பதனால், அவர்கள் பிறந்த சில நாட்களுக்குள் இறந்து விடுகின்றனர் என்று இந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் கூறினார்.

வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஒவ்வொரு நாளும் குறைந்தது 15 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் ஹாரிஸ் கூறினார்.