அமெரிக்க நிதி அமைச்சர் சீனாவில் பயணம்
2024-04-03 16:06:37

சீனா மற்றும் அமெரிக்காவின் கலந்தாய்வுக்குப் பின்பு, அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் லூயிஸ் யெல்லன் அம்மையார் ஏப்ரல் 4முதல் 9ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங்வென்பின் ஏப்ரல் 3ஆம் நாள் தெரிவித்தார்.

இரு நாடுகளின் கூட்டு நலன்கள், இரு நாட்டுறவுக்கான அடிப்படையாகும். சீனாவுடன் இணைந்து அமெரிக்கத் தரப்பு கருத்து வேற்றுமையை நீக்கி, ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, சீன –அமெரிக்க பொருளாதார உறவின் நிதானமான வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.