குழுந்தை வளர்ச்சிக்கான சீனாவின் வேண்டுகோள்
2024-04-04 19:09:21

பட்டினி மற்றும் வறுமையை நீக்கி, கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சையை பரவல் செய்து, குழுந்தைகளின் பன்முக வளர்ச்சிக்கு உத்தரவாதம் செய்யும் வகையில், தொடர்புடைய நாடுகள் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச சமூகம் உதவியளிக்க வேண்டும் என்று, ஐ.நாவிலுள்ள சீனாவின் துணை நிரந்தர பிரதிநிதி காங்சுவாங் 3ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.

குழந்தை மற்றும் ஆயுத மோதல் பற்றி ஐ.நா பாதுகாப்பவையின் வெளிப்படையான கூட்டத்தில் அவர் கூறுகையில், உலகளவில் தற்போது 15 கோடி குழந்தைகளுக்கு மனித நேய உதவி தேவைப்படுகிறது. சர்வதேச சமூகமும் ஐ.நா பாதுகாப்பவையும் தடையை நீக்கி, பாதுகாப்பை உறுதிப்படுத்து, ஆயுத மோதலில் ஒவ்வொரு குழந்தையும் மிக பெரிய அளவில் ஆதரவையும் உதவியையும் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கடந்த 6 திங்களில் காசா பிரதேசத்தில் சுமார் 13 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்தனர். போரினால் காசாவில் வாழ்ந்து வரும் குழந்தைகள் பெரிய பேரழிவில் சிக்கியுள்ளனர் என்று ஐ.நா குழந்தை நிதியம் தெரிவித்தது. காசாவைத் தவிர, இதர மோதல் பிரதேசத்தில் வாழ்கின்ற குழந்தைகளின் தலைவிதி துயரமாகிவிட்டது. இதனால் மனித நேய உதவி விரிவாக்கம், ஒருசார்பு தடை நடவடிக்கை நீக்கம், கடும் தீங்கு நிறுத்தம், முழுமை வளர்ச்சி நனவாக்கம் ஆகியவற்றை முன்னேற்றுவிக்க சர்வதேச சமூகம் முயற்சி செய்ய வோண்டும் என்றும் காங்சுவாங் தெரிவித்தார்.