வாங்யீ-சலெம்க்சேய் சந்திப்பு
2024-04-04 17:32:49

ஏப்ரல் 3ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, குவாங்சி சுவாங் இன தன்னாட்சிப் பிரதேசத்தில் லாவோஸ் துணை தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான சலெம்க்சேய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு நாட்டு தலைவர்களின் நெடுநோக்கு ரீதியான ஒத்த கருத்துக்களை லாவோஸுடன் கூட்டாக நிறைவேற்றி, பிரதேசத்தின் அமைதி மற்றும் வளர்ச்சி நிலைமையை கூட்டாக பேணிகாக்க வேண்டுமென சீனா விரும்புவதாக வாங்யீ தெரிவித்தார்.

புதிய தர உற்பத்தி திறன்களின் வளர்ச்சி, சீன பாணியுடைய நவீனமயமாக்கத்தின் முன்னேற்றத்தின் மூலம் சீனா மேலும் செழுமையாகவும் வலிமையாகவும் அடையும் என்று சலெம்க்சேய் நம்பிக்கை தெரிவித்தார்.

தென் சீன கடல் உள்ளிட்ட பொது கவனம் செலுத்து வேண்டிய பிரச்சினைகளைப் பற்றியும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.