சீனாவின் மின்சார வாகனத் தயாரிப்புத் தொழிலில் அதிக திறன் பிரச்சினை இல்லை: ப்ளூம்பெர்க்
2024-04-05 19:35:39

சீனாவின் மின்சார வாகனத் தயாரிப்பு தொழில் நிறுவனங்கள், வளர்ச்சியடைந்த நாடுகளை விட மேலும் அதிக செயல்திறனை கொண்டுள்ளது என்றும், சீனாவில் அளவுக்கு அதிகமான உற்பத்தி திறன் பிரச்சினை இல்லை என்றும் அமெரிக்காவின் ப்ளூம்பெர்க் அண்மையில் செய்தி வெளியிட்டது.

ப்ளூம்பெர்க வெளியிட்ட ஆய்வு தரவுகளின்படி, மின்சார வாகனத் துறையில் சீனாவின் முன்னணியில் உள்ள பெரும்பாலான வாகன ஏற்றுமதியாளர்களில் திறன் பயன்பாட்டு விகிதங்கள் அனைத்தும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சாதாரண மட்டத்தில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், தற்போது சீனா உலகளவில் மிகப் பெரிய மின்சார வாகனம் மற்றும் கலப்பு விசைப்பொறி உடைய வாகனம் சந்தையாக இருக்கிறது. ஜெர்மனி, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற பெரிய வாகனங்களை உற்பத்தி செய்யும் நாடுகளை விட, அதன் மொத்த உற்பத்தியில் தயாரிப்பு ஏற்றுமதியின் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. சீனாவில் அதிக திறன் பிரச்சினை இருந்தால், அது விற்பனையாகாத புதிய கார்கள் வாகன நிறுத்துமிடங்களில் நிரம்பி நிற்கும் காட்சி காணப்படும். ஆனால், சீனாவின் வாகன விற்பனையாளர்களின் சரக்குகள் அதிகமாக இல்லை. அதிக திறன் இருப்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்று ப்ளூம்பெர்க் கருத்து தெரிவித்தது.