தென் சீனக் கடலில் உள்ள தீவுக்கள் மீதான இறையாண்மையை சீனா கொண்டுள்ளது: பிரிட்டன் சட்டவியல் நிபுணர் கருத்து
2024-04-05 19:44:20

தென் சீனக் கடலின் வரலாறு மற்றும் இறையாண்மை என்னும் புத்தகத்தின் ஆசிரியரும் பிரிட்டன் சர்வதேச சட்டவியல் நிபுணருமான அந்தோணி கார்டி (Anthony Carty) அண்மையில் கூறுகையில், தென் சீனக் கடலில் உள்ள தீவுகள் பண்டைக்காலம் தொட்டு சீனாவுக்குச் சொந்தமான ஒரு பகுதியாகயாகும். இந்தத் தீவுகளுக்கான இறையாண்மையை சீனா கொண்டுள்ளதற்கு போதுமான வரலாற்று மற்றும் நீதித்துறை ரீதியிலான ஆதாரங்கள் இருக்கிறன என்று தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, பிரான்ஸ், பிரிட்டான் மற்றும் அமெரிக்காவில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தென் சீனக் கடல் தீவு உரிமை பற்றிய தேசிய நிலையிலான தகவல்கள் மற்றும் காப்பகப் பொருட்களை ஆராய்ந்ததோடு, அவர் தென் சீனக் கடலில் நேரடியாக ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அவரின் ஆய்வு, தென் சீனக் கடலிலுள்ள தீவுகள் மீதான உரிமைப் பிரச்சினைக்கு, முக்கிய வரலாற்று தகவல்கள் மற்றும் சர்வதேச சட்ட சான்றுகளை வழங்கியது.