ஈரானில் இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
2024-04-06 17:47:08

ஈரானின் பல்வேறு இடங்களில் பொது மக்கள் 5ஆம் நாள் பெருமளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தி, காசா பிரதேசத்தில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைக்கும் சிரியாவுக்கான ஈரான் தூதரகத்தின் கன்சுலர் துறையின் கட்டிடம் மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்தனர்.

ஈரான் இஸ்லாமியப் புரட்சி காவல் படையின் தளபதி ஹோசேயின் சலாமி ஆர்ப்பாட்டத்தில் உரை நிகழ்த்திய போது கூறுகையில், இப்பிரதேசத்தில் உருவாக்கிய “சூழ்ச்சி”க்கு இஸ்ரேல் பதிலளிக்க வேண்டும் என எச்சரித்ததோடு, இஸ்ரேலின் “குற்றத்தை” ஆதரித்த அமெரிக்காவைக் கண்டித்தார். எந்த பகைமை செயலையும் ஈரான் பொருட்படுத்தாமல் இருக்க கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் முதல் நாள் சிரியாவுக்கான ஈரான் தூதரகத்தின் கன்சுலர் துறையின் கட்டிடம், ஏவுகணை தாக்குதலுக்குள்ளானது. இதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் இத்தாக்குதலைத் தொடுத்தது என்று ஈரானும் சிரியாவும் தெரிவித்தன.