இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 645.583 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பு
2024-04-06 16:53:24

இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி, ஏப்ரல் 5ம் நாள் வெளியிட்ட தரவுகள் அறிக்கையின் படி,  கடந்த மார்ச் 29ம் நாள் வரையிலான ஒரு வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2.952 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்து 645.583 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அந்நாட்டின் அந்நிய செலாவணி சொத்துக்கள்  570.618 பில்லியன் டாலர்களாக உள்ளது  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த மார்ச் 22 ஆம் தேதி வெளியிடப்பட்ட தரவுகள் அறிக்கையுடன் ஒப்பிடும் போது 2.354  பில்லியன் டாலர்கள் அதிகமாகும்.

தொடர்ந்து தங்கத்தின் கையிருப்பு 673 மில்லியன் டாலர் அதிகரித்து  52.160 பில்லியன் டாலர்களாக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.