சூடானில் பட்டினி ஏற்பட வாய்ப்புள்ளது: உலக உணவுத் திட்ட அலுவலகம் எச்சரிக்கை
2024-04-06 19:51:27

சூடானில் உதவிப் பொருட்கள் நுழைவதற்கு வசதி அளிக்கும் பொருட்டு, அனைத்து மனித நேய இடைவழிகள் தங்கு தடையின்றி இருப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வறட்சி பருவம் வருவதுடன், முன்பு இல்லாத பட்டினி சூழல், சூடான் முழுவதிலும் ஏற்படக்கூடும் என்று ஐ.நா உலக உணவு திட்ட அலுவலகம் ஏப்ரல் 5ஆம் நாள் தெரிவித்தது.

ஐ.நா உலக உணவு திட்ட அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த மார்ச் திங்களின் பிற்பகுதியில், உதவிப் பொருட்களை அனுப்பும் இரண்டு வாகன அணிகள், சேட் எல்லையிலிருந்து சூடானின் தார்பூர் பிரதேசத்தில் நுழைந்தன. இவ்வாண்டு பிப்ரவரி திங்கள் சேட்விலிருந்து சூடானுக்குச் சென்ற மனித நேய இடைவழிகளை சூடான் மூடிய பிறகு, இப்பிரதேசத்தை அடைந்த உலக உணவு திட்ட அலுவலகத்தின் முதலாவது தொகுதி வாகன அணிகள் அவைகளாகும். இந்த உதவிப் பொருட்களின் மூலம் தார்பூர் பிரதேசத்தில் பட்டினியில் மிகவும் அல்லல்படும் 2 லட்சத்து 50 ஆயிரம் மக்களுக்கு உணவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, உணவு அனுப்பும் 6 லாரிகள் மார்ச் திங்கள் இறுதியில் கிழக்கு சூடான் துறைமுகத்திலிருந்து தார்பூர் பிரதேசத்தை அடைந்தன.